كليلة و دمنة
கலீலா
வ
திம்னா
பஞ்ச
தந்திரக் கதைகள்
தகவல் :
அல்ஆலிம் இப்னுல் ஃபலாஹ் அல்அத்ரமி
( அதிபர் அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா , வாழைச்சேனை ,
ஜாமிஅதுல் ஃபலாஹ் , காத்தான்குடி ) .
31 – 10 – 2009
12 - ذو القعدة - 1430هـ
……………………………………………………
بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين . والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه اجمعين
.
கதைக்
கட்டமைப்பு:
இந்தப் பஞ்ச தந்திரக் கதைகள் மிகவும் பழங்காலத்து நீதிக்கதைகள்
என்றாலும் , இப்பொழுது படித்தாலும் மீண்டும் மீண்டும் படித்தாலும் அவை மிகவும் சுவையானதாகவும்
சுவாரஸ்யமானதாகவும் பயன்மிக்கதாகவும; உள்ளன . இதன் மூலநூல்
சமஸ்கிருத மொழியில் உள்ளது . இதிலுள்ள கதைகள் உலக மொழிகள் அனைத்திலும; மொழp பெயர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கதைகளில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் , குரங்கும் நரியும் குருவியும் காக்கையுமாக
இருந்தாலும் கூட அவை சந்தர்ப்பத்திற்கேற்ற நீதிகளைப் பேசுகின்றன . அவை யாருக்கோ பேசுகின்றன என்று இருந்தாலும் அவை அனைத்தும் நமக்குத்தான் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் .
ஒரு நாட்டை அரசன் ஒருவன்; வெற்றிகரமாக எப்படி அரசாட்சிபுரியவேண்டும் என்பதற்கான நீதிக் கதைகள் அனேகம் இதில் இடம்பெற்றுள்ளன. இன்று அரசன் இல்லாவிட்டாலும் அதே நீதிக் கதைகள் ஒரு ஸ்தாபனத்தை , ( நிறுவனத்தை ) ஒழுங்காக நடத்துவதற்கும் ஒரு பெரிய குடும்பத்தை நன்கு நிர்வகிப்பதற்கும; மிகவும் பயனுள்ளவையாக அமைந்துள்ளன.
கதைகளில் நீதிகள் எடுத்துச் சொல்லப்படும் விதம் மனதில் ஆழப்பதியும்படியாக அமைந்துள்ளது. அதனால்தான் இக்கதைகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன போலும். நீதிகளோடு அமைந்துள்ள இக்கதைகள் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளன. காகம், குருவி, குரங்கு, முதலை, நரி, சிங்கம், முயல், ஒட்டகம் இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களாக இருக்கின்றனவே , இக்கதைகள் எல்லாம் சிறுவர் சிறுமியர்களுக்கான கதைகளாக இருக்குமோ ?! என்று எண்ணிவிட வேண்டாம்.
கதாபாத்திரங்கள்தாம் அப்படி அமைக்கப்பட்டு இருக்கின்றனவே தவிர, அவைகள் பேசும் நீதிகளோ மேன்மையும் சிறப்பும் வாய்ந்தவையாகும். அதனால் இக்கதைகளை சிறுவர்களும் சிறுமியர்களுகளும் இளைஞர்களும் பெரியவர்களும் படித்து மகிழலாம். மூடர்களாக இருந்த அரச குமாரர்கள் இக்கதைகளைக் கேட்டே ஓர் அரசை நன்கு நிர்வகிக்கும் ஆற்றலை மிக எளிதில் பெற்றுவிட்டார்கள்; என்றால் நாமும் இக்கதைகளில் இருந்து படிப்பினைகள் பெறலாம்
அல்லவா?!
பஞ்ச தந்திரக் கதைகள் தோன்றிய விதம்.
முன்பு ஒரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அந்த அரசனுக்கு திருமணமாகி வெகு நாட்களாகியும் பிள்ளைகள் இல்லை. அதனால் அதிகமாக
தான தருமங்கள் செய்துவந்தான். அனேக ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றன் பின்; ஒன்றாக மூன்று பிள்ளைகள் பிறந்தன. அந்தப் பிள்ளைகளை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தான். அந்தப் பிள்ளைகள் அரசகுமாரர்கள் ஆதலால் செல்வச் செழிப்போடு வளர்ந்துவந்தார்கள். ஆனால், அவர்கள் வளர்ந்ததற்கு ஏற்ப, அவர்களின் அறிவு
வளரவிர்லை. மூவரும் வடிகட்டின முட்டாள்கள். இப்படி மடையர்களாகவும் மூடர்களாகவும் இருந்தால் அந்நாட்டை எப்படி ஆளமுடியும்?! அரசன் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்தான்.
பின்பு தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் ஒரு துறவியிடம் ஒப்படைத்தான். அந்தத் துறவி அரசருடைய மூன்று பிள்ளைகளுக்கும் நீண்ட நீண்ட கதைகள் சொன்னார். அந்தக் கதைகளைக் கேட்டு, அரச குமாரர்கள் நாட்டை ஆளும் ஆற்றலைப் பெற்றார்கள். அந்தத்
துறவி தன்னுடைய கதைகளை ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரித்திருந்தார். அதனால்தான் இக்கதைகளுக்கு “பஞ்ச” ( ஐந்து ) தந்திரக் கதைகள் எனப் பெயர் வந்த்து.
அந்த ஐந்து பிரிவுகளாவன:
1) மித்ரபேதம்.
2) சுகிர்ல்லாபம்.
3) சந்திவிக்கிரகம்.
4) அர்த்த நாசம் அல்லது லப்த
ஹானி.
5) அசம்பிரேஷிய காரியத்துவம்.
இவற்றின் பொருள்:
1) நட்பைக் கெடுத்து பகையை உண்டாக்குதல்.
2) தங்களுக்குச் சமமானவர்களுடன் கூடிப் பகையில்லாமல் வாழ்ந்திருத்தல்.
3) பகைவரை நட்பால், உறவால் வெல்லுதல்.
4) கையிலிருக்கும் செல்வத்தை அழித்தல்.
5) எந்தக் காரியத்தையும் தீர
விசாரிக்காமல் செய்தல்.
இவ்வாறு ஐந்து பெரும் பிரிவுகளில் அந்தத் துறவி கதை சொன்னார்.
………..………………………………..
السلام عليكم ورحمة الله وبركاته
ReplyDeleteماشاء الله
يسر الله لنا ولكم كل خير جهود مباركة رائعة
وعليكم السلام
Deleteماشاء الله
ReplyDeleteمبروك