இமாம்
ஷாஃபி (றஹ்) அவர்களின்
ஃபிக்ஹ்
ஆய்வு
விதிகள்
ஆக்கம்;
அல்ஆலிம்
இப்னுல்
ஃபலாஹ்
அல்அத்ரமி
மௌலவி mam.றஹ்மதுல்லா அல்ஃபலாஹி
முன்னுரை
ஒருவரை அணுகுவதற்கு சில அணுகுமுறைகள் இருப்பது
போல, ஒரு வாகனத்தை ஓட்டுவதற்கு முறைகள் இருப்பது
போல, சமைப்பதற்கென்றே சில முறைகள் இருப்பது போல, அல்குர்ஆன் , அஸ்ஸ{ன்னாவி( அல்ஹதீஸி )லிருந்து ஃபிக்ஹ் ( மார்க்கச் ) சட்டங்களை
ஆய்வு செய்வதற்கென சில ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. அந்த ஒழுங்கு
முறைகளுக்கு اصول الفقه ( ஃபிக்ஹ்
ஆய்வு
விதிகள் ) என்று
சொல்லப்படும்.
உசூலுல் ஃபிக்ஹ் اصول الفقه என்ற
அரபு
வார்த்தையின்
தமிழ்
மொழி
பெயர்ப்பு:
1) ஃபிக்ஹ்
ஆய்வு
முறைமைகள்.
( இஸ்லாமிய மார்க்க சட்டவாக்க ஆய்வு முறை மைகள் ).
2) ஃபிக்ஹ்
ஆய்வு
விதிகள்.
3) ஃபிக்ஹ்
சட்ட
இயல்.
4) ஃபிக்ஹ்
ஆய்வுக்
கோட்பாடுகள்.
5) ஃபிக்ஹ்
ஆய்வுத்
திட்டங்கள்.
6) ஃபிக்ஹ்
ஆய்வு
விதிமுறைகள்.
7) ஃபிக்ஹ்
ஆய்வுக்
கொள்கைகள்.
8) ஃபிக்ஹ்
ஆய்வு
நெறிமுறைகள்.
9) ஃபிக்ஹ்
ஆய்வு
நியதிகள்.
10) ஃபிக்ஹ்
ஆய்வு
நியமங்கள்.
11) ஃபிக்ஹ்
ஆய்வு
ஒழுங்குகள்.
12) ஃபிக்ஹ்
ஆய்வு
மூலாதாரங்கள்.
13) ஃபிக்ஹ்
ஆய்வு
அம்சங்கள்.
14) ஃபிக்ஹ்
ஆய்வுத்
தத்துவங்கள்.
15) ஃபிக்ஹ்
ஆய்வு
அணுகுமுறைகள்.
16) ஃபிக்ஹ்
ஆய்வுத்
தேற்றங்கள்.
تعريف اصول الفقه :ஃபிக்ஹ் ஆய்வு விதிகள்
வரைவிளக்கணம்:
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்கென
சில முறைகள் இருக்கும். அந்த முறைகளைப்
பின்பற்றி அந்தச் செயலை செய்கிறபோது அது பிழையின்றி முழுமையாக அமையும். உதாரணமாக பிரியாணி சமைக்கின்றோம் என்றால் அதற்கென சில முறைகள் உள்ளன.
அந்த முறைகளைப் பின்பற்றினால்தான் சரியான சுவையான பிரியாணியாக இருக்கும்.
இது போல் …….….., அல்குர்ஆன்,அஸ்ஸ{ன்னாவி (அல்ஹதீஸ்களி )லிருந்து
சரியான முறையான ஃபிக்ஹ் சட்டங்களை ஆய்வுசெய்து எடுக்கவேண்டும் என்றால் , அதற்கென உள்ள ஆய்வு முறைகள் பின்பற்றப்படல் வேண்டும்.
அல்குர்ஆன் ,அஸ்ஸ{ன்னாவி ( அல்ஹதீஸ்களி ) லிருந்து சரியான முறையான ஃபிக்ஹ் சட்டங்களை ஆய்வுசெய்வதற்கென இமாம்கள் (இஸ்லாமிய அறிஞர்கள்) பலவகையான ஆய்வுத் திட்டங்களை தொகுத்துத் தந்துள்ளார்கள். இவ்வதறான ஆய்வுத் திட்டங்களுக்கு, ஆய்வுத் தொகுப்புகளுக்கு
اصول الفقه உசூலுல் ஃபிக்ஹ்
என்று
பெயர்.
இது என் (இப்னுல் ஃபலாஹ்) னுடைய வரைவிளக்கணமாகும். இந்த உசூலுல் ஃபிக்ஹ் பொது மக்களுக்கு நேரடியாகப் பயன்படாது. ஆலிம்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மட்டுமே பயன்படும்.
வஹ்பதுZ சுஹைல் அவர்கள் எழுதிய “ அல் வஜீZஸ் ஃபீ உசூலில் ஃபிக்ஹ் ” என்ற கிதாபில்
வரக்கூடிய உசூலுல்
ஃபிக்ஹ்
குரிய
வரைவிளக்கணத்தை
இங்கே
தருவது
சிறந்தது.
அல்குர்ஆன் , அல்ஹதீஸ்களிலிருந்து மார்கச்
சட்டங்களை
ஆய்வு
செய்வதற்காக
அல்முஜிதஹித் என்ற
ஆய்வாளர்
பயன்படுத்துகின்ற ஆய்வுத் திட்டங்களே, (ஆய்வுத் திட்டத்
தொகுப்புகளே) உசூலுல் ஃபிக்ஹ் ஆகும்.
تعريف علم اصول الفقه
كما وقع في شرح الورقات :
اصول الفقه طرقُ الفقهِ على سبيلِ الاجمالِ و كيفيةُ الاستدلالِ بها
و صفاتُ المفتي وصفاتُ المستفتي .
اصول الفقه
சட்ட இயல் என்பது
طرق الفقه
ஃபிக்ஹ் ( அதாவது மார்க்கச் ) சட்டங்களை
உருவாக்கத்
தேவையான
வழிமுறை களாகும். (துர்க்
طرق ) ஆய்வுத்திட்டங்களாகும்.
على سبيل الاجمال
பொதுப்படையாக அமைந்த / பொதுவான ( விதிகளாகும். வழிமுறைகளாகும். ஆய்வுத் திட்டங்களாகும் ).
و كيفيةُ الاستدلالِ بها
பொதுப்படையாக அமைந்த ஆய்வுத்
திட்டங்களைப் பயன்படுத்தி ஆய்வுசெய்யும்
முறையும்
و صفاتُ المفتي
அல்முஃப்தி المفتي என்ற ஆய்வாளருக்கு
இருக்கவேண்டிய தன்மைகளும் ,
وصفاتُ المستفتي .
மார்க்க விளக்கங்களைப்பெற விரும்பும் ( المستفتي அல்முஸ்தஃப்தி என்ற ) நபருக்கு
இருக்கவேண்டிய ஒழுக்க மாண்புகளும்.
( ஆக , உஸூலுல் ஃபிக்ஹ்
என்பது , ஃபிக்ஹ{ (மார்க்கச் ) சட்டங்களை உருவாக்கத் தேவையான பொதுப்படையாக
அமைந்த ஆய்வுத்
திட்டங்களும் , பொதுப்படையாக
அமைந்த ஆய்வுத்
திட்டங்களைப் பயன்படுத்தி ஆய்வுசெய்யும் முறையும் , அல்முஃப்தி المفتي என்ற ஆய்வாளருக்கு
இருக்கவேண்டிய தன்மைகளும் , மார்க்க
விளக்கங்களைப்பெற விரும்பும் ( المستفتي அல்முஸ்தஃப்தி என்ற ) நபருக்கு
இருக்கவேண்டிய ஒழுக்க மாண்புகளும் ( பற்றி ஆய்வுசெய்யும் கலை
) ஆகும்.
ஷர்ஹுல் வரகாத் என்ற கிதாபில் வந்துள்ள வரைவிளக்கணத்தின்படி , உஸூலுல் ஃபிக்ஹ் நான்கு அம்சங்களைக் கொண்டது.
1)
ஃபிக்ஹ் சட்ட ஆய்வு முறைகள் , விதிகள் ;
(ஃபிக்ஹ் சட்ட ஆய்வு முறை(மை)கள் என்ற இந்த முதலாது அம்சம் , باب الامر பாபுல் அம்ர் , باب النهيபாபுன் நஹி , باب العامّபாபுல் ஆம் , باب الخاص பாபுல் ஹாஷ் , باب القياس பாபுல் கியாஸ்
என்பன போன்ற பலவகையான பாடத் தலைப்புகளில் இடம்பெறுள்ளன . இவ்வாறு பலவகையான பாடத் தலைப்புகளில் இடம்பெறுள்ள
இந்த ஃபிகஹ் ஆய்வுச் சட்டங்கள்தான் , முறைமைகள்தான் ஃபிக்ஹ் சட்டங்களுக்கு அடிப்படைகளாக உள்ளன.
).
2)
ஃபிக்ஹ் ஆய்வு விதிகளை , ஒழுங்கு முறைகளைப் பயன்படுத்தும் விதங்கள்
, கையாளும் முறைகள்:
( ஃபிக்ஹ் ஆய்வு விதிகளை எவ்வாறு பயன்படுத்த
வேண்டும் . இந்த ஃபிக்ஹ் ஆய்வு விதிகளைப் பயன்படுத்துகிறபோது
ஏற்படுகின்ற சிக்கல்களை எவ்வாறு சரிசெய்யவேண்டும் என்பன போன்றவற்றை இந்த இரண்டாது அம்சம் விளங்கப்படுத்தும்.)
3)
அல்முஃப்தி المفتي என்ற ஆய்வாளருக்கு
இருக்கவேண்டிய தன்மைகள், தகமைகள்,
அறிவாற்றல்கள், ஒழுக்க விழுமியங்கள்:
( அல்முஃப்தி
என்ற இந்தப் பதம் المجتهد
அல்முஜ்தஹித்
என்ற
முதல்தர
வரிசையிலுள்ள
ஆய்வாளரைக்
குறிக்கும். இந்த முதல்தர வகையைச் சேர்ந்த ஆய்வாளரின் கல்வித் தரம் , சமய சமூக ஒழுக்கப் பண்பாட்டுத் தரங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இந்த மூன்றாவது அம்சம் தெளிவுபடுத்தும்.)
4)
ஆய்வாளரை அணுகி மார்க்க விளக்கங்களைப்பெற விரும்பும் ( المستفتي அல்முஸ்தஃப்தி ) என்ற நபருக்கு இருக்கவேண்டிய தன்மைகள்
, ஒழுக்க மாண்புகள்:
( المجتهد என்ற ( ஆலிம் ) ஆய்வாளர்
மார்க்கத்தீர்ப்பு
வழங்கும்
பதவியில்
அமர்த்தப்பட்டு
இருக்கும்
நிலையில்
அவர்
ஒரு
நீதிபதியாக
இருக்கிறார். எனவே அவரை சந்திப்பதற்கும் அவருடன் உரையாடுவதற்குமான ஒழுங்குகள் , சம்பிரதாய நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை இந்த நான்காது அம்சம் விவரிக்கும்).
·
ஃபிக்ஹ் ஆய்வு விதிகள் / முறைமைகள் ,
·
ஃபிக்ஹ் ஆய்வு விதிகளை / முறைமைகளைப் பயன்படுத்தும் விதங்கள் ,
·
ஆய்வாளருக்கான ( மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞருக்கான ) தகமைகள் ,
·
மார்க்க அறிஞரை சந்தித்து மார்க்கத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நபருக்கான / பொதுமக்களுக்கான நடைமுறைகள் .
ஆக ,
இந்த
நான்கு
அம்சங்களை , விடயங்களை பலவிதமான பாடத் தலைப்புகளில்
ஆராயும்
கலைக்கு , இயலுக்கு
“ இல்மு
உஸூலில்
ஃபிக்ஹ் ”
( ஃபிக்ஹ்
கோட்பாட்டு
இயல் )
என்று
சொல்லப்படும்.
நான்கு வகையான
ஆய்வுக்
கோணங்கள்:
எந்த ஒரு பொருளையும் நாம் எந்தக் கோணத்தில் பார்கின்றோமோ அதற்கேற்ப அந்தப் பொருள் மாறுபடும். ஒரு விடயத்தை நாம் எந்தக் கோணத்தில் அணுகுகின்றோமோ அதற்கேற்ப ஆய்வு விதிகளும் ஆய்வும் அமையும். எங்களுடைய இமாம்கள் ( சட்ட இயல் அறிஞர்கள் ) பல கோணங்களில் ஆராய்ந்து ( اصول الفقه ) ஃபிக்ஹ் ஆய்வுத் திட்டங்களை , கோட்பாடுகளை இயற்றித்தந்துள்ளார்கள். இவ்வாறு பல்நோக்கு ஆராய்ச்சியின் அடிப்படையில் எங்களுடைய இஸ்லாமிய சட்ட இயல் அறிஞர்கள், சுமார் நான்கு வகையான ( அல்லது அதற்கும் மேற்பட்ட ) ஃபிக்ஹ் ஆய்வுத் திட்டங்களை, ஃபிக்ஹ் ஆய்வுக்கோட்பாடுளை அறிமுகம் செய்துள்ளார்கள்.
1) طريقة
الفقهاء / طريقة
الحنفية في
التأليف في
اصول الفقه
:-
2) طريقة المتكلمين
/ طريقة الشافعية
في التأليف
في اصول
الفقه :-
3) طريقة المتأخرين
/ الطريقة الجامعة
بين الطريقين
:-
4) الطريقة الخاصة
الحديثة :-
நான்கு வகையான ஃபிக்ஹ் ஆய்வுத் திட்டங்கள், ஃபிக்ஹ் ஆய்வுக் கோட்பாடுள், கோணங்கள்:
(1)
طريقة الفقهاء / طريقة الحنفية في التأليف في اصول الفقه :-
ஹனஃபி மத்ஹப் சட்ட இயல் அறிஞர்களின் ஆய்வு முறை ( ஆய்வுக்கோணம்)
(2)
طريقة المتكلمين / طريقة الشافعية في التأليف في اصول
الفقه :-
ஷாஃபி
மத்ஹப்
சட்ட
இயல்
அறிஞர்களின்
தத்துவ
ஆய்வு
முறை
( தத்துவ
ஆய்வுக்கோணம்
)
(3)
طريقة المتأخرين / الطريقة الجامعة بين
الطريقين :-
பிற்கால
சட்ட
இயல்
அறிஞர்களின்
ஆய்வு
முறை
( மேற்சொன்ன
இரண்டு
ஆய்வு
முறைகளும்
இணைந்த
, ஒன்றை
ஒன்று
தழுவிய
ஆய்வு
முறை)
(4)
الطريقة الخاصة الحديثة :-
சமீப கால சட்ட இயல் அறிஞர்களின் தனித்துவமான நவீன ஆய்வுமுறை.
நான்கு
வகையான
ஃபிக்ஹ்
ஆய்வுக் கோணங்களில்
முதலாவது ஆய்வுக் கோணம்
طريقة الفقهاء / طريقة الحنفية في التأليف في اصول الفقه :-
ஹனஃபி மத்ஹப் சட்ட இயல் அறிஞர்களின் ஆய்வு முறை ( ஆய்வுக்கோணம்):
ஹனஃபி மத்ஹப் சட்ட இயல் அறிஞர்களின் ஆய்வு முறை என்பது , ஒரு மொழியில் பல இலக்கியங்கள் தோன்றிய பின் தோன்றுகின்ற இலக்கணத்தைப் போன்றது. ஆம் , பல வகையான ஹனஃபி ஃபிக்ஹ் சட்டங்கள் ( ஃபிக்ஹ் நூல்கள் ) தோன்றிய பின்னர்தான் ஹனஃபி மத்ஹப் சட்ட இயல் அறிஞர்களின் ஆய்வு முறை اصول الفقه ) (தோன்றியது. அதாவது ஹனஃபி மத்ஹப் இமாம்கள் ( الفقهاء ) அளித்த மார்க்கத் தீர்ப்புகளை ( الفتوى ) அடிப்டையாக வைத்து ஆராய்ந்து உருவாக்கப்பட்டதே ஹனஃபி மத்கப் சட்ட இயல் அறிஞர்களின் ஆய்வு முறையாகும்.
நான்கு
வகையான
ஃபிக்ஹ்
ஆய்வுக் கோணங்களில்
இரண்டாவது ஆய்வுக் கோணம் :
طريقة المتكلمين / طريقة الشافعية في التأليف في اصول
الفقه :-
ஷாஃபி
மத்ஹப்
சட்ட
இயல்
அறிஞர்களின்
தத்துவ
ஆய்வு
முறை
( தத்துவ
ஆய்வுக்
கோணம்
):
ஹனஃபி மத்ஹப் இமாம்கள் ( الفقهاء ) அளித்த மார்க்கத் தீர்ப்புகளை ( الفتوى ) அடிப்டையாக வைத்து ஆராய்ந்து உருவாக்கப்பட்டதே ஹனஃபி மத்ஹப் சட்ட இயல் என ஏற்கனவே கூறிவுள்ளோம். ஆனால்
ஷாஃபி மத்ஹப் சட்ட இயல் ( اصول الفقه ) , ஹனஃபி
மத்ஹப்
சட்ட
இயல்
தோன்றியது
போல்
தோன்றியது
அல்ல
.
மாறாக
ஷாஃபி மத்ஹப் சட்ட இயல் அறிஞர்கள் தங்களுக்கென தத்துவ
ஆய்வு
முறையை ( ஆய்வுத் திட்டத்தை ) உருவாக்கி அதெற்கேற்ப ஷாஃபி ஃபிக்ஹ் சட்டங்களை உருவாக்கினார்கள். ஷாஃபி உஸூலுல் ஃபிக்ஹை பொறுத்தவரையில் , இனிமேல் கட்டப்போகும் கட்டடத்திற்கு வரைபடம் வரைவது போல . ஹனஃபி உஸூலுல் ஃபிக்ஹை பொறுத்தவரையில் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடத்திற்கு வரைபடம் வரைவது போல .
ابواب اصول الفقه :
உஸூலுல் ஃபிக்ஹ் பாடங்கள்:
· باب الكلام واقسامه :
· சொல்லியல் :
சொல்லின் அமைப்பு ,
சொல் வகைகள் .
· தொடரியல் :
வாக்கியமும் வாக்கிய உறுப்புகளும் ,
தனிவாக்கியமும் அதன் அமைப்பும் ,
கலப்பு வாக்கியமும் அதன் அமைப்பும் .
· الاسناد / الحديث عنه :
· புணரியல் :
புணர்ச்சியும் புணர்ச்சி வகைகளும் .
v
· باب الامر والنهي :
· உடன்பாட்டு , எதிர்மறை கட்டளை
வாக்கியங்கள் :
v
· باب العام :
· பொதுச் சொல்லாக்கம் / பொதுமை வாக்கியம் :
(வரையறையின்றி அனைவரையும் / அனைத்தையும்
உள்ளடக்கி , ஒரே
நேரத்தில் அனைவரையும் / அனைத்தையும் குறிக்கும்
வசன அமைப்பு ) .
v
· باب المطلق :
· பொதுமையும் ஒருமையுமான சொல்லாக்கம் / வசனம் :
(வரையறையின்றி அனைவரையும் / அனைத்தையும்
உள்ளடக்கி , ஒருவரையோ / ஒன்றையோ குறித்து
நிற்க்கும் சொல்லாக்கம். / வசன அமைப்பு ).
·
باب الخاص :
· வரைமுறைச் சொல்லாக்கம் / வரைமுறை வாசகம் :
( பொதுமை வாக்கியத்தை வரைமுறை வாக்கியமாக மாற்றி அமைக்கும் சொல்லாக்கம். / வசன அமைப்பு . ) عام ( ஆம்மை ) خاص ( ஹாஸ்ஸாக மாற்றக்கூடிய வசன அமைப்பு ) .
v
· باب المبيَّن :
· கருத்துத் தெளிவான வார்த்தை / சொல் / பதம் :
v
· النصُّ :
·
(அல;குர்ஆன் / அல்ஹதீஸ் போன்றவற்றின் ) பிரதான (மூல) வாசகம் / சான்று / ஆதாரம்.
v
باب الظاهر :
· நேர்மறையான சொல்லாக்கம் / நேர்மறையான வசனம் :
தெளிவான , எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய , எதார்த்தமான , நேர்மறையான கருத்தைக் கொண்ட சொல்லாக்கம். / வசன அமைப்பு.
v
· باب المؤول :
· கருத்துப் புரட்டுச்
செய்யப்பட்டது / கருத்து மாற்றம் செய்யப்பட்டது.
( காரணத்துடன் / விளக்கத்துடன் / ஆதாரத்துடன் கருத்து மாற்றம் செய்யப்பட்ட சொல்(லாக்கம்) / வசன அமைப்பு ).
v
· باب الافعال :
· நபி ( ஸல் ) அவர்களின் செயல்பாடுகள்.
v
· باب الناسخ والمنسوخ
:
· சட்டபூர்வமான சட்டத்தை ரத்துச்செய்யக்கூடியது.
· சட்ட மாற்றம் / சட்ட திருத்தம் / சட்ட நீக்கம் செய்யப்பட்டது.
v
· باب التعارض :
· ( ஆதாரங்களுக்கு இடையே ) முரண்பாடு.
v
· باب الاجماع :
· ஒருமித்த அபிப்பிராயம் / தீர்மானம்.
v
· باب الاخبار :
· ஹதீஸ்( பற்றிய தகவல் )கள்.
v
· باب القياس :
· ஒப்பீட்டு ஆய்வு.
v
· باب الحظر والاباحة :
· தடைசெய்தல், அனுமதித்தல் ( حرام ஹராம் حلال ஹலால் ) கோட்பாடு.
v
· الاستصحاب / استصحاب
الحال :
· ( ஒரு விடயம் / ஒரு நிலைமை ) தொடர்ந்து
இருப்பதாக
அனுமானித்தல் / நினைத்தல்.
( புதிய தீர்ப்பு / புதிய சட்டம் வரும்வரை பழைய தீர்ப்பை / பழைய சட்டத்தை நடைமுறைப்படுத்துல்.
· ترتيب الادلة :
· ( ஆய்வுக்கான ) ஆதாரங்களை ( தகவல்களை ) ஒழுங்குபடுத் துதல்.
v
· صفة المفتي والمستفتي
:
· இஸ்லாமிய சட்டத்தீர்ப்பு வழங்குபவரின் பண்பும்
இஸ்லாமிய சட்டத்
தீர்வு பெறுவதற்கு
விரும் புவரின்
பண்பும் .
v
· التقليد والمقلِّد :
· ( மற்றவரை ) பின்பற்றுதல். ( பிறரை ) பின் பற்றுபவர்.
v
· احكام المجتهدين :
· ஆய்வாளருக்கான நியதிகள்:
v
மேற்கூறப்பட்டுள்ள பாடத் தலைப்புகளில் உசூலுல் ஃபிகஹ் அமையும்.
No comments:
Post a Comment